பிக் பாஸ் சீசன் 9: 55 வது நடந்தவற்றின் ஹைலைட்ஸ்! | Bigg Boss Season 9: Day 55 highlights

Spread the love

FJ சிறைக்குச் சென்றாலும் பின்னாடியே சென்று அமர்ந்து வியானா, “உன்னை பழைய மாதிரி பார்க்கணும்ன்னு தோணுது. என்னை யாராவது கேர் பண்ணா பிரச்சினை. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஹார்ட் அடிச்சுக்குது.

இது சரியில்ல” என்று அனத்திக் கொண்டிருந்தார். சமயங்களில் புத்திசாலித்தனமாகப் பேசும் வியானாவிற்கு, இந்த லவ் டிராக் நமக்கு எதிராக திரும்பி விடும் என்பது புரியாதா? அல்லது வயசுக் கோளாறா?

FJ மீதுள்ள அக்கறை காரணமாக இந்த விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருந்தார் கனி. “நீங்க ரெண்டு பேரும் இப்படி நடந்துக்கறது வெளில எப்படித் தெரியும்ன்றது உனக்குத் தெரியும்.

அது தெரிஞ்சுதான் நடந்துக்கறியா.. அவளுக்கும் இது தெரியுமா? உங்களுக்குள்ள ஃபீலிங்க்ஸ்ன்னு ஒண்ணும் இல்லைல்ல? ”என்று கனி கேட்க “இங்க ஒருத்தர் கிட்ட comfort zone உருவாகறது நேச்சுரல். சுபிக்ஷாவும் இப்ப வியானாகிட்ட சரியா பேசறதில்ல. இதன் விளைவுகள் எனக்குத் தெரியும்” என்று துணிச்சலாகச் சொன்னார் FJ.

சாண்ட்ராவிடம் வாயை விட்டு மாட்டிக்கொண்ட FJ

ஒன்றுக்கொன்று முரண்கொண்ட மனிதர்கள் அடைக்கப்பட்ட சூழலில், தமக்கு ஆதரவாக இருப்பவர்களை நோக்கி மனம் சாயும். குறிப்பாக பெண்களுக்கு தங்களை கேர் எடுத்துக்கொள்பவர்களைப் பிடிக்கும். அந்த வகையில் வியானாவிற்கு FJ மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும். இது இயல்பானதுதான். ஆனால் இது ஆட்டத்தைப் பாதிக்காத அளவிற்கு அவர்கள் பார்த்துக் கொள்ளவில்லை என்பதுதான் பிரச்னை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *