பிக் பாஸ் 8: அணிமாறும் தர்ஷா குப்தா, தீபக்!

Dinamani2f2024 10 142fbbzsxfng2fdharsha Gupta Deepak.jpg
Spread the love

பிக் பாஸ் போட்டியின் 8வது நாளான இன்று தர்ஷா குப்தாவும், தீபக்கும் அணிமாறினர்.

அதாவது ஆண்கள் அணியில் இருந்த தீபக் பெண்கள் அணி பக்கமும், பெண்கள் அணியில் இருந்த தர்ஷா குப்தா ஆண்கள் அணி பக்கமும் சென்றனர்.

கடந்த வாரம் முத்துக்குமரனும், பவித்ரா ஜனனியும் அணிமாறிய நிலையில், இந்த வாரம் தர்ஷா குப்தா, தீபக் அணி மாறியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது தற்போதுதான் முழு வடிவம் பெற்றுள்ளது எனலாம். அதாவது ஆண்கள் அணியிலிருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும் பெண்கள் அணியிலிருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் மாறி விளையாட வேண்டும். இது ஒவ்வொரு வாரமும் நடைபெறும்.

இந்த வாரம் நாமினேஷனில் அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படும் நபரைத் தேர்வு செய்வதற்காக, ஆண்கள் அணியினர் ஒட்டுமொத்தமாக செளந்தர்யாவின் பெயரைப் பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளனர்.

முந்தைய நாள் இரவில் ஆண்கள் அணியினரிடம் பேசிய முத்துக்குமரன் செளந்தர்யாவை வெளியேற்ற அனைவரும் ஒன்றாக இணைவோம், இதற்கு விருப்பம் உள்ளவர்கள் ஒத்துழைக்கவும் வேண்டுகிறார்.

பிக் பாஸ் போட்டியை சதுரங்கம் போன்று நினைத்துக்கொண்டுள்ளதாகவும், இதில் ஜாக்குலின் குதிரை போன்றவர். அவருக்கு முன்பு உள்ள சிப்பாய்களை வெளியேற்ற வேண்டும், அதில் முதல் நபர் செளந்தர்யா. தர்ஷா குப்தா ஜோக்கர். அதனால் அவரை போட்டியிலிருந்து வெளியேற்ற ஓட்டு போட வேண்டாம். ஆனால் செளந்தர்யா எளிமையாக வெளியேற்றிவிடலாம். இதனால் அனைவரும் செளந்தர்யாவுக்கு வாக்கு அளிக்கலாம் என முத்துக்குமரன் கூறுகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னியல்பில் உள்ள தர்ஷா குப்தாவை ஜோக்கர் என முத்துக்குமார் கூறியது சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்புகளை முத்துக்குமாருக்கு ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *