பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

Dinamani2f2024 09 242ficpie10o2fvijay Sethupathi.jpg
Spread the love

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டார்.

இந்நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே நடிகர் சத்யா வெளியேற்றப்பட்டார். பின்னர் நடிகை தர்ஷிகா வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருந்த நிலையில், நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டதால், தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

கடந்த வாரம் கற்களை கொண்டுகோட்டை கட்டும் போட்டி நடத்தப்பட்டது. மூன்று நாள் நடைபெற்ற இப்பொட்டி சண்டையும் சச்சரவுமாகவே நடைபெற்றது.

மஞ்சரியுடன் அணிசேர்ந்து விளையாடிய ராணவ்வுக்கு ஜெஃப்ரியுடன் ஏற்பட்ட மோதலில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதல், ராணவ் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். இதனால் போட்டியில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.

இதையும் படிக்க: பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி!

இந்த போட்டியில் ஜாக்குலின், ரயான் மற்றும் ரஞ்சித் இடம்பெற்ற அணி இறுதியில் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அவர்களில் இருந்து ரயானை தேர்வு செய்து நாமினேசன் ஃப்ரீ பாஸை அந்த அணியினர் வழங்கினர்.

இந்த நிலையில், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ரஞ்சித் இந்நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டார்.

இறுதிப்போட்டிக்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், போட்டி கடுமையாக மாறும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *