பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் தீபக் மக்கள் மனங்களைக் கவர்ந்து வருகிறார்.
ஒவ்வொரு போட்டியின்போதும் தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாமல், உடலளவிலும் மனதளவிலும் யாரையும் காயப்படுத்தாமல், போட்டியில் தீபக் வெற்றி பெற்று வருகிறார்.
மற்ற போட்டியாளர்கள் ஒவ்வொரு டாஸ்க் செய்யும்போதும் தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொள்வது, பார்வையாளர்களை முகம் சுழிக்கவைத்துள்ளது.
பிக் பாஸ் விளையாட்டை போட்டியாக மட்டுமே வைத்துக்கொண்டு அதனை தனிப்பட்ட முறையில் உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொள்ளாமல், தீபக் விளையாடி வருவதால் மக்கள் ஆதரவு அவருக்கு அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 59வது நாளை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் பாடகர் ஜெஃப்ரி கேப்டனாகியுள்ளார்.
இந்த வாரத்தில் டெவில்களும் ஏஞ்சல்களும் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஏஞ்சல் அணியில் ரஞ்சித், வி.ஜே. விஷால், அன்ஷிதா, ஆர்.ஜே. ஆனந்தி, பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, ரயான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். டெவில்களாக செளந்தர்யா, ஜாக்குலின், முத்துக்குமரன், ராணவ், சாச்சனா, மஞ்சரி, தர்ஷிகா, தீபக், அருண் பிரசாத் உள்ளிட்டோர் உள்ளனர்.
டெவில்களின் வேலை, ஏஞ்சல்களை பொறுமை இழக்கச் செய்து, அவர்களிடம் இருந்து ஸ்டார்களைப் பெறவேண்டும். ஏஞ்சல்கள், தங்களுக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அமைதி காக்க வேண்டும்.
போட்டியின் முதல் நாளில் ஏஞ்சல் குழுவில் இருந்த பவித்ரா, சத்யா, அன்ஷிதா ஆகியோரிடம் டெவில் குழுவில் இருந்தவர்கள் அத்துமீறி நடந்துகொண்டனர்.
தரக்குறைவாகப் பேசுவது, முட்டையைக் குடிக்க வைப்பது, துணிகளைக் கிழித்தெறிவது போன்ற செயல்களில் தர்ஷிகா, சாச்சனா, மஞ்சரி ஆகியோர் ஈடுபட்டனர். இதனால் மனமுடைந்த அன்ஷிதா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாகக் கதறி அழுதார்.
இவ்வாறு ஒவ்வொருவரும் ஏஞ்சல் போட்டியாளர்களை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்தி வெல்ல முயற்சித்தனர். ஆனால், நடிகர் தீபக் இவ்வாறு எதையும் செய்யாமல் மற்றவர்களுடன் பேசி மற்றவர்களின் இதயங்களைப் பெற்றுள்ளார்.
அதிக இதயங்களைப் பெற்ற டெவில் குழு போட்டியாளராகவும் தீபக் மாறியுள்ளார். போட்டியை நேர்மையாகவும் மற்றவர்களைக் காயப்படுத்தாமலும் விளையாடுவதால், மற்ற போட்டியாளர்களிலிருந்து தீபக் தனித்துத் தெரிவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வாரத்தில் மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் ஏஞ்சல்களும் டெவில்களும் டாஸ்க்கில் தீபக்கின் விளையாட்டு மக்கள் மனங்களை வென்றுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: முதல்முறையாக கோபமடைந்த ரஞ்சித்! கண்ணீர் விட்ட ஜாக்குலின்!