பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 12ஆம் நாளான இன்று போட்டியாளர்கள் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான போட்டியில் பங்கேற்றனர்.
சிலர் பாடல்களைப் பாடியும், நடனம் ஆடியும், முக பாவனைகளைக் காட்டியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் 12ஆம் நாளான இன்று மற்ற நாள்களைக் காட்டிலும் பொழுதுபோக்காகச் சென்றதென்றே கூறலாம். அந்த அளவுக்கு பொழுதுபோக்கான அம்சங்கல் நிறைந்திருந்தன.
குறிப்பாக நேற்று சக போட்டியாளர்களால் கிண்டலுக்குள்ளான ஜெஃப்ரி பாடிய பாடல் சக போட்டியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
குழுவாக போட்டியாளர்கள் பாடிய விஜயகாந்த் பாடலுக்கு நடிகை தர்ஷிகா நாற்காலியில் அமர்ந்து கொடுத்த முகபாவனைகள் பலரை ஈர்த்தது.
தொகுப்பாளர் முத்துக்குமரனும், ஆர்.ஜே. ஆனந்தியும் சேர்ந்து சிறிய நாடகத்தை அரங்கேற்றினர். இருவருமே நடிப்புத் துறையில் இல்லை என்றாலும், இவர்களின் நடிப்பு நடிப்புத் துறையில் இருந்த போட்டியாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
காதல் திருமணத்துக்குப் பிறகான தம்பதியின் சோக நிகழ்வை
சின்னத்திரை நடிகை பவித்ராவும் தீபக்கும் இணைந்து நடித்துக் காண்பித்தனர்.
விஜே விஷாலும் அன்ஷிதாவும் சீரியசாக நடித்தது பலரிடையே சிரிப்பலையையும் ஏற்படுத்தினாலும், அன்ஷிதா உண்மையாக அழுதுகொண்டு நடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். தனது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால், நடிப்பதை நிறுதிவிட்டு அழத்தொடங்கினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர்.
பிக் பாஸ் வீட்டில் சண்டையும், சச்சரவாகவுமே சென்றுகொண்டிருந்த வேளையில், இன்று முழுக்க பொழுதுபோக்காகச் சென்றதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.