2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பார்டர் – கவாஸ்கர் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸுக்கு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. அதை அவர் கைப்பற்றிக்கொள்வாரா என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், இந்திய அணித் தரப்பில் ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு மட்டுமின்றி அவரது கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக் குறியாகியுள்ளது. இந்தத் தொடரில் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் ரோஹித், விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றுவிடுவார்கள் என்ற தகவலும் இணையத்தில் வைராலாகி வருகிறது.
இந்த நிலையில், சிட்னியில் நடைபெறும் பிங்க் டெஸ்ட் போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிங்க் நிறத்திலான தொப்பியுடன் குழுப்புகைப்படம் எடுத்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.