இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
முதல் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இந்தியா ஏ அணியுடன் ஆடவிருந்தது. அதை ரத்து செய்துள்ளது பிசிசிஐ அணி.
இதனை முன்னாள் வீரரும் தொடருக்கு பெயர் காரணமான சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.