பிப்ரவரி 14 காதலர் தினத்தில் நடிகர் தனுஷ் 2-வது திருமணம்?மிருணாள் தாகூர் கரம் பிடிக்கிறார் – Kumudam

Spread the love

நடிகர் தனுஷ் தமிழ் படங்கள் தவிர்த்து பிற மொழி படங்களிலும் நடத்தி வருகிறார். இந்தியில் தேரே இஷ்க் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில், போர்த் தொழில் இயக்குநர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் கர படத்தில் தனுஷ் நடித்துள்ளா்.

தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகில் மிருணாள் தாகூர் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் . மிருணாள் தாகூரும், தனுஷூம் இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனாலும் இருவரை பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. 

‘சன் ஆஃப் சர்தார் 2’ பட விழாவில் தனுஷ் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவரும், மிருணாள் தாகூரும் நெருக்கமாகப் பேசிப் பழகிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த வீடியோ குறித்து பேசிய மிருணாள், “தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவர் அந்த விழாவிற்கு அஜய் தேவ்கனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். மற்றபடி எங்களைப் பற்றி வரும் செய்திகளில் உண்மை இல்லை” என கூறியிருந்தார்.

இந்நிலையில், தனுஷ்- மிருணாள் தாகூர் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. டேட்டிங்கிள் இருக்கும் இருவரும் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.  நடிகர் தனுஷ் ஏற்கனவே ரஜினி காந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து, 18 ஆண்டுகள் கழித்து விவாரகத்து செய்துக் கொண்டனர்.  இந்தநிலையில், தனுஷ் மிருணா தாகூரை 2வதாக திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *