பிப்.17 ம் தேதி சூரிய கிரகணம்… பரிகாரம் செய்ய வேண்டுமா? ஜோதிடம் சொல்வது என்ன? | feb-17-solar-eclipse-remedies-astrology-explains

Spread the love

வானியல் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானவை சூரிய கிரகணம் மற்றும் சந்திரகிரகணம். ஓர் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை நிகழும் இந்தக் கிரகணங்கள் குறித்த ஜோதிட சாஸ்திரம் மிகவும் விரிவாகப் பேசுகிறது.

நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா (நிழல்) கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன. சூரியன், சந்திரன் ஆகியன ராகுவோடும் கேதுவோடும் இணைந்திருக்கும் காலத்தில் கிரகணங்கள் தோன்றும்.

சூரியன், சந்திரன் ஆகியன ராகுவுடன் இணைந்திருந்தால் சூரிய கிரகணமும் சந்திரனுடன் கேதுவோடும் சூரியன் ராகுவோடும் இருந்தால் சந்திரகிரகணம் தோன்றும் என்பதை நம் பஞ்சாங்கங்கள் மூலம் ஜோதிடர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்திருக்கின்றனர். அதாவது அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் பௌர்ணமி நாளில் சந்திரகிரகணமும் தோன்றும்.

சூரிய கிரகணம் - ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

சூரிய கிரகணம் – ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

அந்த வகையில் இந்த ஆண்டு சூரியன் வரும் பிப்ரவரி 17 – ம் தேதி கும்பராசியில் சஞ்சரிக்கிறார். கும்பராசியில் தற்போது ராகு பகவான் சஞ்சரித்துவருகிறார். சந்திரனும் அந்த நாளில் கும்பத்தில் இணைகிறார். எனவே அந்த நாளில் கிரகணம் தோன்றுகிறது.

பிப்ரவரி 17 அன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:26 மணிக்குத் தொடங்கி மாலை 7:57 மணிவரை கிரகணம் நிகழ இருக்கிறது. இந்தக் கிரகண காலத்தில் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா என்னும் கேள்வி பலருக்குள்ளும் இருக்கிறது. மேலும் கோயில்களில் பூஜை முறைகளில் மாற்றம் இருக்குமா என்பது குறித்த சந்தேகமும் உள்ளது. இது குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதரிடம் கேட்டோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *