பிப் 2-ல்  தமிழக இடைக்கால பட்ஜெட்: தேர்தலையொட்டி புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு  – Kumudam

Spread the love

ஆண்டுதோறும் பிப்ரவரி, 1ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, மாநில அரசுகளின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில்  தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் நிர்வாக செலவுகளை கவனிப்பதற்காகவும், எஞ்சியுள்ள திட்டங்களுக்கு நிதி விடுவிப்பதற்காகவும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

கடந்த 2021 சட்டசபை தேர்தல், அதே ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள், 2021 மார்ச் 12ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. அவசரமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அப்போதைய அ.தி.மு.க., அரசால், பல பணிகளை மேற்கொள்ள முடியாமல், ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.

இதனால்  முன்கூட்டியே, நடப்பாண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து திமுக அரசு, இடைக்கால பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.  மத்திய அரசு, பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தவுடன், 2ம் தேதி தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 

இதற்காக பணிகளில் கவனம் மேற்கொள்ளுமாறு அனைத்து துறை செயலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவுகள் பிறப்பித்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *