பிரசவ தேதி கடந்துவிட்ட நிலையில், குழந்தையின் நிலையைக் கண்காணிக்க, ‘பயோபிசிகல் புரொஃபைல்’ எனும் ஸ்கேன் செய்யப்படும்.
40 வாரங்களில் கர்ப்பிணியின் இடுப்பெலும்புப் பகுதியை சோதனை செய்து பார்த்து, கர்ப்பப்பையின் வாயானது பிரசவிக்க ஏற்றதாக இருக்கிறதா என்று பார்ப்போம். சில மருத்துவர்கள் பிரசவ வலி வருவதற்காக 41 வாரங்கள்கூட காத்திருப்பதுண்டு. கர்ப்பப்பை வாய் பிரசவிக்கத் தயார்நிலையில் இருப்பது தெரிந்தால் செயற்கையாக பிரசவ வலியைத் தூண்ட கர்ப்பிணிக்கு மருந்துகள் கொடுப்போம்.

கர்ப்பப்பை வாயானது சாதகமாக இல்லாத நிலையில் NST ( non stress test), AFI (Amniotic fluid index), BPP (biophysical profile) போன்ற டெஸ்ட்டுகளின் மூலம் குழந்தையைக் கண்காணிப்போம். இந்த டெஸ்ட் எல்லாம் நார்மல் என்ற நிலையிலோ, கர்ப்பிணிக்கு வலி வரும் பட்சத்திலோ உடனடியாக டெலிவரி பார்ப்போம். ஒருவேளை குழந்தை மிகவும் பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பை வாய் சாதகமாக இல்லாமலிருந்தாலோ, தாய் மற்றும் குழந்தையின் நலன் கருதி, சிசேரியன் செய்ய முடிவெடுப்போம். எனவே, மருத்துவர் குறித்துக்கொடுத்த தேதியில் பிரசவம் நிகழவில்லை என்றால் அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.