கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் கே.ஜி.எஃப் படங்களின் மூலம் இந்தியளவில் மிகவும் பிரபலமானார்.
பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் கடைசியாக இயக்கிய சலார் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் அடுத்து வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளதுய்.
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்துள்ளார் பிரசாந்த் நீல்.
தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தி திரைப்படமான வார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரசாந்த் நீல் உடன் இணைந்துள்ளார். இதன் பூஜை இன்று நடைபெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இதனை தயாரிக்கிறது.
இந்தப் படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
The moment we all have been waiting for is here #NTRNeel begins with an auspicious Pooja Ceremony
The DUO is all set to create a MONSTROUS HAVOC at the BOX OFFICE ❤️
See you all on his land from ,
Man of Masses @tarak9999… pic.twitter.com/rzNzrsZIcG
— Mythri Movie Makers (@MythriOfficial) August 9, 2024