பிரச்சார கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக அனுப்பப்படுவார்: இபிஎஸ் எச்சரிக்கை  | eps warns if unmanned ambulance arrives at election campaign rallies the driver will be sent as a patient

1373645
Spread the love

வேலூர்/சென்னை: அணைக்​கட்டு தொகு​தி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள வந்த அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கூட்டத்தில் நோயாளி இல்​லாத ஆம்​புலன்​ஸ் கடந்து செல்ல முயன்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. ‘அடுத்த கூட்​டத்​தில் வேண்டுமென்றே ஆளில்​லாத ஆம்​புலன்​ஸ் வந்​தால் அதன் ஓட்​டுநர் நோயாளி​யாக செல்​வார்’ என பழனி​சாமி எச்​சரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்​பட்​டது.

வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு தொகு​தி​யில் ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற சுற்​றுப்​பயணத்​தில் நேற்று முன்​தினம் இரவு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். பிரச்​சார வாகனம் வந்து நின்​றதும் அருகே இருந்த சிறிய தெரு​வில் இருந்து ஆம்​புலன்​ஸ் வாக​னம் ஒன்று சைரன் ஒலித்​த​படி கடந்து சென்​றது. அதில் நோயாளி இல்​லாமல் இருப்​பதை அதி​முக தொண்​டர்​கள் பார்த்து கூச்​சலிட்​டனர்.

இதனால், அதிருப்தி அடைந்த பழனி​சாமி, “என்​னோட ஒவ்​வொரு கூட்​டத்​தி​லும் இதே​போல் ஆளே இல்​லாமல் ஆம்​புலன்ஸை தொடர்ச்​சியா அனுப்பி மக்​களை சிரமப்படுத்தும் வேலையை இந்த அரசு செய்​கிறது. இதனால் மக்​களுக்கு ஏதாவது ஒன்​றா​னால் யார் பொறுப்​பு. நானும் 30 கூட்​டத்​தில் பார்த்​து​விட்​டேன் இதே​போலத்​தான் செய்​கிறார்​கள். நேருக்கு நேர் எதிர்க்க முடி​யாதவர்​கள் இதுபோன்ற செயலில் ஈடு​படு​கிறார்கள்.

இந்த ஆம்​புலன்​ஸ் எண், ஓட்​டுநரின் பெயரை​யும் குறித்து வைத்து காவல் நிலை​யத்​தில் புகார் அளி​யுங்​கள். அடுத்த கூட்​டத்​தில் வேண்​டுமென்றே ஆள் இல்​லாமல் ஆம்​புலன்​ஸ் வந்​தால், ஓட்டி வரும் ஓட்​டுநரே அதில் நோயாளி​யாக ஏற்றி அனுப்​பப்​படு​வார்” என்றார். தொடர்ந்​து, பேசிய அவர், “இந்​தி​யா​விலேயே விவ​சா​யிகளுக்கு அதிக இழப்​பீட்டு தொகை பெற்​றுத்​தந்த அரசு அதி​முக அரசு​தான்.

அதி​முக ஆட்​சி​யில்தான் அதி​களவு இலவச வீட்​டுமனை பட்டா மற்​றும் முதி​யோர் உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது. நாட்​டிலேயே அதிக உயர்​கல்வி படிப்​போர் உள்ள மாநிலம் தமிழ்​நாடு என்ற சாதனையை உரு​வாக்​கியது அதி​முக ஆட்​சி” என்​றார்.

‘108’ நிர்​வாகம் விளக்​கம்: இதற்கிடையே ‘108’ ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், “அணைக்​கட்டு அரசு மருத்​து​வ​மனை​யில் வயிறு உபாதை பிரச்​சினை​யால் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த ஓங்​கப்​பாடி கிராமத்​தைச் சேர்ந்த சந்​திரா (60) என்ற மூதாட்​டியை வேலூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்க மருத்​து​வர்​கள் பரிந்​துரைத்​துள்​ளனர். இதற்​காக, 108 ஆம்​புலன்​ஸுக்கு இரவு 9.45 மணிக்கு தகவல் கொடுத்​தனர்.

ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் சுரேந்​தர் இரவு 10.20 மணி​யள​வில் அதி​முக பிரச்​சார கூட்​டத்தை கடந்து சென்​ற​போது பிரச்​சினை ஏற்பட்டுள்​ளது. பின்​னர், நோயாளி சந்​தி​ராவை, வேலூர் அரசு மருத்​து​வக்கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் இரவு 12.30 மணி​யள​வில் ஓட்​டுநர் சுரேந்​தர் அனு​ம​தித்​துள்​ளார். கூட்​டத்தை கவனிக்​காமல் ஓட்​டுநர் சுரேந்​தர் வந்​துள்​ளார். ஆம்​புலன்ஸ் வாக​னத்தை பாதுகாப்பு பணி​யில் இருந்த போலீ​ஸார் பக்​கத்து தெரு வழி​யாக செல்ல அறி​வுறுத்​தினர்.

அப்​படி செல்​லும்​போது பிரச்​சார வாக​னத்தை நெருங்​கிய படி சென்​ற​போது பிரச்​சினை ஏற்​பட்டு ஓட்​டுநரை அடிக்​கின்ற நிலை ஏற்​பட்​டுள்​ளது. இந்த பதற்​றத்​தால் அணைக்​கட்டு அரசு மருத்​து​வ​மனை​யில் ஓட்​டுநர் சுரேந்தரை போலீஸார் சுமார் 40 நிமிடங்​கள் காத்​திருக்க வைத்​திருந்​தனர். அதன் பிறகே நோயாளியை அழைத்​துச்​செல்ல அனு​ம​தித்​தனர் என்று விளக்​கம் அளித்​துள்​ளது.

அமைச்சர் கருத்து: இதுதொடர்பாக சென்னையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, எங்கு சென்றாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாக பழனிசாமி சொல்கிறார். எங்கேயாவது விபத்து ஏற்பட்டால் 8 முதல் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சென்று உயிர்களை காக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் வரும் வழியில் இவர் கூட்டத்தை கூட்டிவிட்டு, தான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடுவதாக சொல்கிறார். மருத்துவ பணியாளரை ஒரு முன்னாள் முதல்வர், மிரட்டுவது போல் பேசுவது அநாகரிகமாகும். அவர் இத்துடன் இதனை நிறுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *