பிரதமரின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: திருமாவளவன் கருத்து | Thirumavalavan says Prime Minister announcement of GST tax changes is pleasing

1373201
Spread the love

மதுரை: பிரதமர் மோடி​யின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறி​விப்பு மகிழ்ச்சி அளிக்​கிறது என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் கூறி​னார்.

மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பிரதமர் சுதந்​திர தின விழா உரை​யில், தீபாவளிப் பரி​சாக ஜிஎஸ்டி வரி விதிப்​பில் மாற்​றம் செய்​யப்​படும் என்று அறி​வித்​துள்​ளது மகிழ்ச்சி அளிக்​கிறது. ஜிஎஸ்டி வரி முறையையே கைவிட வேண்டும், பழைய முறையை நடை​முறைப்​படுத்த வேண்​டும் என்று நாங்​கள் வலி​யுறுத்​துகிறோம். பிஹார் தேர்​தலை மனதில் வைத்து இந்த அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது என்​றாலும்​கூட, அது மக்​களுக்​குப் பயனுள்​ள​தாக அமை​யும் என்​ப​தால் வரவேற்​கிறோம்.

தூய்​மைப் பணி​யாளர்​களின் போராட்​டத்​துக்கு ஆதர​வாக விசிக தொடக்​கத்​திலிருந்தே குரல் கொடுத்து வரு​கிறது. மத்​திய, மாநில அரசுத் துறை​ தனி​யார் மயம் தீவிரமடைந்து வரு​கிறது. தூய்​மைப் பணி​யாளர்​களை அரசு ஊழியர்​களாக்க வேண்​டும். தனி​யார் மயமாக்​கக்​கூ​டாது என்று தமிழக முதல்​வரை சந்​தித்து வலி​யுறுத்​தினோம். தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு நீதி கிடைக்க வேண்​டும் என்​ப​தை​விட, இப்​பிரச்​சினையை வைத்து திமுக கூட்​ட​ணியை உடைக்க வேண்​டும் என்​பது​தான் சிலரின் நோக்​க​மாக இருக்​கிறது.

தூய்​மைப் பணி​யாளர்​களில் பெரும்​பாலானோர் தலித்​துகளாக இருப்​ப​தால் அந்​தப் பிரச்​சினையைப்​பற்றி திரு​மாவளவன்​தான் பேச வேண்​டும் என்ற பார்​வை​யும் ஏற்​புடையதல்ல. இது எல்​லோருக்​கு​மான பிரச்​சினை. சென்​னை​யில் 15 மண்​டலங்​களில் 11 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யார்​மயப்​படுத்த அரசாணை பிறப்​பித்​ததே அதி​முக​தான். அந்த அரசாணை​யைத்​தான் தற்​போது செயல்​படுத்​துகின்​றனர்.

போராடு​பவர்​கள் யாரும் அரசாணை பிறப்​பித்த அதி​முக பற்றி பேச​வில்​லை. இதை திமுக​வுக்கு வக்​காலத்து வாங்​கு​வதற்​காக சொல்​ல​வில்​லை. திமுக செய்​தால் எதிர்க்க வேண்​டும், அதி​முக செய்​தால் வேடிக்கை பார்க்க வேண்​டும் என்​பது​தான் இங்​குள்ள அரசி​யல் அணுகு​முறை​யாக இருக்​கிறது. தவெக தலை​வர் விஜய் புதிய அணுகு​முறையைக் கை​யாளுகிறார்.

அதற்கு காலம்​தான் பதில் சொல்​லும். அவர் மக்​களைத்தேடிச் செல்​லும் காலம் விரை​வில்வரும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.தொடர்ந்​து, கோ.புதூரில் நடந்த நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் திரு​மாவளவன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்​டாடி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *