இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை காலை 9.50 மணியளவில் தில்லி புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் தில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
நாளை(மே.23) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவேளையின் போது பிரதமரை சந்திக்க முதல்வர் நேரம் கேட்டுள்ளார்.