பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

dinamani2F2025 09 172Fwcooyi3l2Fnewindianexpress2025 09 010c755y0wPTI09012025000030A.avif
Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாகத் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் புதினுக்கு நன்றி எனவும், உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்புகளையும் செய்ய தயாராக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: 140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *