பிரதமர் மோடியால் மட்டுமே வங்கதேச சிறுபான்மையினரைக் காப்பாற்ற முடியும்: பாஜக எம்.பி.

Dinamani2f2024 082f8a78ab2c F1a0 4a8e 99a0 658fc775e74d2fwhatsapp20image202024 08 0620at2012.14.2320pm.jpeg
Spread the love

வங்க தேசத்தில் சிறுபான்மையினரைக் காப்பாற்ற பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என்று பாஜக எம்.பி. கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள போராட்டங்களில் சிறுபான்மையினருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்த பாஜக எம்.பி. ஜெகந்நாத் சர்க்கார், பிரதமர் மோடியால் மட்டுமே வங்கதேசத்தின் சிறுபான்மையினரைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார்.

பாஜக எம்பி ஜெகந்நாத் கூறியதாவது, “வங்கதேசத்தில், சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அவர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

வங்கதேசத்தில் ராணுவத்தின் ஆதரவு கிடைத்துள்ளதால், நம் நாட்டிற்கும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் நேர வாய்ப்புள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்து சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க முயற்சி எடுத்தனர்.

எனவே, இப்போது அவர்கள் இருவரையும் பாதுகாப்பது வங்கதேச மக்களின் பொறுப்பே. விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *