மெரிக்கா மற்றும் வெஸ்இண்டீசில் நடைபெற்ற டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கேப்டன் ரோகித்சர்மா, வீராட்கோலி, பாண்ட்யா ஆகியோர் உற்சாகத்தில் திளைத்து ஆனந்த கண்ணணீர் வடித்தனர். இதைத்தொடர்ந்து வீராட்கோலி, ரோகித்சர்மா, ஜடோஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தனர்.
இந்தியா திரும்புகிறார்கள்
உலககோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட் அரசியல் கட்சி தலைவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியில் உடனடியாக கோப்பையுடன் தாயம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. புயல் மற்றும் மழை காரணமாக அவர்கள் பார்படாசில் இருந்து புறப்பட முடியாமல் சிக்கி தவித்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் தனி விமானம் மூலம் இந்திய அணியினர் தாயகம் புறப்பட்டு உள்ளனர். முன்னதாக இந்திய வீரர்கள் விமானத்தில் டி20 உலக கோப்பையுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து தங்களது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.
மோடியுடன் சந்திப்பு
இந்திய வீரர்கள் நாளை காலை 6 மணிக்கு புது டெல்லி வந்தடைகின்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க உள்ளனர்.
பின்னர் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடியை வெற்றி கோப்பையுடன் சந்திக்கிறார்கள். அவர்களுடன் பிரதமர்மோடி கலந்துரையாடுகிறார். கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு பின்னர் கிரிக்கெட் வீரர்கள் டெல்லியில் இருந்து மும்பைக்கு வருகிறார்கள். வான்கடே மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்த வாகனத்தில் கிரிக்கெட் வீரர்கள் வெற்றி ஊர்வலம் ரோடுஷோ நடத்த உள்ளனர்.
பாரட்டு விழா
இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்த உள்ளனர். இதனால் மும்பை நகரம் விழாக்கோலமாக மாற உள்ளது.இதன் பின்னர் வான்கடே மைதானத்தில் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறிய அளவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய முன்னாள் வீரர்கள் மற்றும் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.