பிரதமர் மோடி புரூணேய், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம்!

Dinamani2f2024 09 032frd8wzib32fpti09 03 2024 000013b.jpg
Spread the love

பிரதமர் மோடி இன்று(செப். 3) காலை புரூணேய் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். புதுதில்லியிலிருந்து புரூணேய் தலைநகர் பந்தார் செரி பேகவானுக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார் மோடி.

புரூணேய் தருஸ்ஸலாம் நாட்டுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும். ஒருநாள் பயணமாக புரூணேய் செல்லும் மோடி, அங்கு மன்னர் சுல்தான் ஹாஜி ஹஸானால் போல்கியாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, இந்தியா – புரூணேய் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.

இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், இந்தியா – புரூணேய் இடையே விண்வெளித் துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

புரூணேயிலிருந்து சிங்கப்பூருக்கு புதன்கிழமை(செப். 4) செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் தர்மான் சண்முகரத்னம் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூரில் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *