“பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் திருவாசகம் அரகேற்றம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது”- ஜி.வி பிரகாஷ்|gv. prakash about pongal celebration in delhi

Spread the love

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்.

“ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

பொங்கல் விழாவில் சிவகார்த்த்திகேயன், ரவி மோகன்

பொங்கல் விழாவில் சிவகார்த்த்திகேயன், ரவி மோகன்

குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட ‘பராசக்தி’ படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எல்லோருக்கும் இந்தப் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சிசையைத் தர வேண்டும். ‘பராசக்தி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தை டெல்லியில் கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *