இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, இன்று (செப்.12) முதல் செப்.21 ஆம் தேதி வரை சீனாவில் சுமார் 10 நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் முதல் நாளான இன்று, அவர் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரத்துக்கு வருகை தந்துள்ளார். அந்நாட்டில் நடைபெறும் கோல்டன் பாண்டா சர்வதேச கலாசார மன்றத்தின் திறப்பு விழாவில் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிச்சுவான் மாகாணம், ஷாங்காய் மற்றும் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி ஆகியவற்றை அவர் பார்வையிடுகிறார். மேலும், இந்தப் பயணத்தில் அந்நாட்டின் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன், சீனா – பாகிஸ்தான் உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கடந்த ஆகஸ்ட் 20 முதல் 22 ஆகிய இருநாள்கள் பாகிஸ்தானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!