பிரதமர் வருகை: ஏப். 4 – 6 வரை மீன்பிடிக்கத் தடை

Dinamani2f2025 04 012fa7vjf8tk2fnarendra Modi Fisher Man Edi.jpg
Spread the love

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 – 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக மீன்வளத் துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ஆம் தேதி இலங்கை செல்லும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகு, நாட்டுப் படகுகளை, குந்துகால் துறைமுகத்திற்கும் தங்கச்சிமடம் பகுதிக்கும் மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *