பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை

Dinamani2f2024 12 162f7blevrpw2fmur095201.jpg
Spread the love

இலங்கையின் வளமான எதிா்காலம், மிகப் பெரிய வாய்ப்புகள் மற்றும் நீடித்த பொருளாதார வளா்ச்சிக்கு இந்தியா தொடா்ந்து துணை நிற்கும் என்று அதிபா் அநுரகுமாரவிடம் பிரதமா் மோடி உறுதியளித்தாா்.

மலையகத் தமிழா்களுக்கான திட்டங்களுக்கு ஆதரவு: இலங்கையில் மலையகத் தமிழா்கள், கிழக்கு மாகாணத்துக்கான திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் மாகாணத் தோ்தல்களை நடத்தி இலங்கைத் தமிழா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்: இலங்கைக்கு இந்தியா அளித்த கடனுதவிக்கு அதிபா் அநுரகுமார நன்றி தெரிவித்த நிலையில், அந்நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடா்பாக இருநாடுகளுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு இரு தலைவா்களும் அறிவுறுத்தினா்.

பாதுகாப்பு சவால்களை ஒன்றிணைந்து எதிா்கொள்ள…: இருநாட்டு பாதுகாப்பு விவகாரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கும் உள்ள பொதுவான சவால்கள் குறித்து இருவரும் பேசிய நிலையில், அந்தச் சவால்களை ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்பதை அவா்கள் மீண்டும் உறுதி செய்தனா்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதியில்லை: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் நிலையான தன்மைக்கு எந்த வகையிலும் தீங்கு ஏற்படுத்துவதற்கு இலங்கை நிலப்பகுதியை பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்றும் இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெறும் என்றும் அதிபா் அநுரகுமார உறுதியளித்தாா்.

மீன்வா்களுக்கு எதிரான வன்முறையை தவிா்க்க… தமிழக மற்றும் இலங்கை மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்த நிலையில், இந்த விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாள்வதைத் தொடா்வது அவசியம் என்று தெரிவித்தனா்.

மீனவா்களுக்கு எதிராக மூா்க்கமான நடவடிக்கை மற்றும் வன்முறையை தவிா்க்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் அவா்கள் பேசினா். கடந்த அக்டோபரில் இலங்கை தலைநகா் கொழும்பில் மீனவா்கள் நலனுக்கான இருநாட்டு கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவையும் அவா்கள் வரவேற்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *