பிரபலங்களுடன் போட்டோ; ஃபோர்ஜெரி பணத்தில் எம்.எல்.ஏ ஆக பிளான் – புதுச்சேரி தொடர் குற்றவாளி கைது!

Spread the love

கோடிக்கணக்கில் சுருட்டிய குற்றவாளிகள்

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கோட்டுச்சேரி போலீஸார், கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இரவு அவரை `நன்றாக கவனித்து’ தூக்கியிருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய கோட்டுச்சேரி காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரிகள், “காரைக்கால் தேவனூர்சாலையைச் சேர்ந்த நீலமேகம் என்பவரும் விக்கி என்ற ராஜகணபதியும் நண்பர்கள்.

காரைக்காலில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் செக்யூரிட்டி தொடங்கி செவிலியர் பணிகள் வரை வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 140 பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு ஜிப்மர் பெயரில் போலி பணி ஆணைகளையும் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பணத்தை ஜாலியாக செலவழித்துக் கொண்டு, அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து போட்டோ எடுப்பார்கள்.

சென்னை மேயர் பிரியாவுடன் விக்கி

சென்னை மேயர் பிரியாவுடன் விக்கி

அந்தப் போட்டோவை காட்டி, `பாத்தீங்களா… எல்லார்கிட்டையும் பேசிட்டோம். உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்’ என்று தவணை முறையில் பாக்கித் தொகையையும் வசூலித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் வேலைக்காக முயற்சிப்பவர்களை புதுச்சேரியில் ஓர் இடத்திற்கு வரவழைத்து, நீலமேகத்தை ஜிப்மர் மருத்துவமனையின் உயரதிகாரி என்று கூறி மீட்டிங் போட்டெல்லாம் பணத்தை வசூலித்திருக்கிறார்கள். அந்தப் பணத்தைத்தான் நலத்திட்டங்கள் என்ற பெயரில் சிலருக்கு வழங்கியிருக்கிறார்கள். தற்போது எம்.எல்.ஏ கனவுடன் சுற்றிய விக்கி என்ற ராஜகணபதியைக் கைது செய்துவிட்டோம்.

அவரது நண்பர் நீலமேகத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். சில கட்சிகளுக்கு தேர்தல் நிதிகூட கொடுத்திருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஒரு லட்சம் கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் விக்கி” என்றனர் விரிவாக.

இவர்கள் ஏமாற்றியது குற்றம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம் படித்தவர்களையும், தகுதியானவர்களையும் தங்களின் பணபலத்தால் பின்னுக்குத் தள்ளிவிட்டு, குறுக்கு வழியில் அரசு வேலையை அடையை நினைத்து ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது ?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *