பிரபல சின்னத்திரை நடிகர் ஐயப்பன் மீது அவரது மனைவி பிந்தியா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமாக இருப்பவர் ஐயப்பன். இவருக்கும் பிந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று மகள் இருக்கிறார். இவர்கள் 12 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக ‘கயல்’ என்ற தொடரில் நடிக்கத் தொடங்கிய பிறகு இருவருக்குள்ளும் அதிகடிப்படியான சண்டைகள் ஏற்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தனது கணவர் ஐய்யப்பன் மீது மதுரவாயலில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிந்தியா புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் ஐயப்பன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தன்னை தொடர்ந்து துன்புறுத்தல் செய்வதாகவும், சண்டைபோடுவதாகவும், தனது மகள் முன்னிலையில் சண்டையிட்டு ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இருவரும் பேசாமல் இருந்து வந்த நிலையில், தனது கணவரிடம் பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பிந்தியா முயன்று வருகிறார். அந்த வகையில் வளசரவாக்கம் பகுதியில் சின்னத்திரை தொடர் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அங்கு சென்ற பிந்தியா தனது கணவர் ஐயப்பனை பார்க்க வேண்டும் எனக் கூறினார். அவரை படப்பிடிப்பு குழுவினர் உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பிந்தியா, “எனது கணவர் 3 வருடங்களாக வீட்டிற்கு பணம் எடுக்கவில்லை. எனது மகள் தொடர்பாக எந்த அக்கறையும் எடுத்துக்கொள்வதில்லை. இதுதொடர்பாக என்னிடம் பேச மறுக்கிறார். இதனால் எனக்கும் எனது மகளுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிற்கு குடித்துவிட்டு போதையில் வந்து அடிக்கிறார், பொருட்களை உடைக்கிறார்.