பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் விபத்து, ராக் & ரோல் ராட்டினத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயம் – Kumudam

Spread the love

சென்னை ராயபுரம் ஆர்தூண் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப்.  இவரது மகள் ஜப்ரீன் பாத்திமா(21) பிராட்வே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 6/2/26 அன்று ஜப்ரீன் பாத்திமா உள்ளிட்ட மாணவர்கள் சிலரை கல்லூரி நிர்வாகம்  சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல விஜிபி யுனிவர்சல் கிங்டம்  பொழுதுபோக்கு பூங்காவிற்கு சுற்றுலா அழைத்து சென்றனர். 

அப்போது மாணவி ஜப்ரீன் பாத்திமா உள்ளிட்ட மாணவர்கள் சிலர் அங்கு ராக் & ரோல் ராட்டினத்தில் ஏறி அமர்ந்த ரைட் செல்ல ஆயுத்தமான போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் ஜப்ரீன் பாத்திமா சீட் பெல்ட் அணிவதற்க்குள் ராட்டினத்தை இயக்கியதாக தெரிகிறது. அப்போது மாணவி ஜப்ரீன் பாத்திமா ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் பகுதியில் காயம் ஏற்பட்டது.‌ 

உடனே அருகில் இருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மாணவி மேல் சிகிச்சைக்காக தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாணவி இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்து ஏற்படுத்திய விஜிபி யுனிவர்சல் கிங்டம் பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்களான அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சில்வெஸ்டர் பூர்டி(19) மற்றும் அருணோதய் கவுலா(22) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் நேற்று  கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்கள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *