பிரம்மயுகம் இயக்குநர் படத்தில் பிரணவ் மோகன்லால்!

Dinamani2f2024 12 072fi3mpaadi2fpage.jpg
Spread the love

நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.

தொடர்ந்து, வர்ஷங்களுக்கு ஷேஷம் திரைப்படத்தில் நாயகனாக நடித்து அதிலும் வெற்றிபெற்றார். அதேநேரம், குறைவான படங்களிலேயே நடிக்கும் பிரணவ், உலகம் முழுவதும் சுற்றும் பயணியாகவும் இருக்கிறார்.

எப்போதும் வெளிநாட்டு பயணங்களிலேயே இருப்பதும் அங்கு இசைக்கருவிகளை வாசித்து எளிமையான வாழ்க்கையை வாழ்வதையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார். பெரும்பாலும் கேரளத்தில் இருக்க மாட்டார்.

இதையும் படிக்க: விடாமுயற்சி டப்பிங்கை முடித்த அஜித்!

அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியாமல் இருந்த நிலையில், மோகன்லால் மனைவி சுசித்ரா அளித்த நேர்காணலில் தன் மகன் பிரணவ் வாழ்க்கை அனுபவத்திற்காக ஸ்பெயினில் விவசாயப் பண்ணை ஒன்றில் கூலி பெறாமல் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக மட்டும் வேலை பார்த்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படம் கருப்பு வெள்ளை திரைப்படமாகவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் உலகளவில் ரூ.80 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *