பிரிட்ஜ், டிவி, 4 மின்விசிறிகள் பயன்படுத்தியதற்காக ரூ.20 லட்சம் மின் கட்டணமா?

Dinamani2f2024 08 112fx2jkssv72febbill.jpg
Spread the love

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது அந்த ஏழை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, தறுதலாக மின் கட்டணம் வழங்கப்பட்டுள்ளதை மின்வாரியமே ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்து பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் ஏழை பெண் பங்க்திபென் படேல் கூறியதாவது:

“எங்கள் வீட்டில் நான்கு பேர் வசிக்கிறோம். வீட்டில் நான்கு பல்புகள், நான்கு மின்விசிறிகள், ஒரு ப்ரிட்ஜ் மற்றும் ஒரு டிவி என வீட்டில் குறைந்த அளவு மின்சாதனங்களே உள்ளது. வீட்டில் மூன்று பேர் நாள் முழுவதும் வேலைக்கு சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவோம்.”

எங்கள் வீட்டிற்கு வழக்கமாக இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் 2,500 வரை வரும். இந்த முறை ஜூன் – ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.20,01,902 வந்துள்ளது. எங்கள் வீட்டிற்கான மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தி வரும் நாங்கள் எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இது தொடர்பாக குஜராத் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, முதலில் முறையான புகாரைப் பதிவு செய்யுமாறு கூறினர். பின்னர் இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் மதிப்பாய்வு செய்ததில் மின் மீட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தின் அளவு தவறாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மின் கட்டணம் சரிசெய்யப்பட்டது. இதன் மூலம் பங்க்திபென் படேல் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்து மீண்டு நிம்மதியடைந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *