போராட்டம் ஏன்?
பிரிட்டனின் எசெக்ஸ் மாகாணத்தில் எப்பிங் நகரில் புலம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கான விடுதி உள்ளது. அந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அந்த விடுதியை மூடக் கோரி வலதுசாரி அமைப்பினர் விடுதிக்கு வெளியே திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பான, வழக்கை விசாரித்த எப்பிங் மாவட்ட நீதிமன்றம், விடுதியை நடத்த தற்காலிக தடை விதித்து, மூடுவதற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பிரிட்டன் இணையமைச்சர் டான் ஜார்விஸ் தெரிவித்தார்.
வார விடுமுறை நாளான சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் கூடி புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால், பிரிஸ்டல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.