பிரிந்து சென்றவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க திட்டம்: ஓபிஎஸ், தினகரனை டெல்லிக்கு அழைக்கும் பாஜக | BJP invites OPS, Dhinakaran to Delhi to reunite those who broke away from the alliance

1376060
Spread the love

சென்னை: அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒருங்​கிணைத்​தால் தான் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் கரை சேர முடியும் என கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு 10 நாட்​கள் கெடு விதித்து செங்​கோட்​டையன் போர் கொடி தூக்​கிய நிலை​யில், செங்​கோட்​டையன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​களின் கட்சி பதவி​கள் பறிக்​கப்​பட்​டன. இதைத்​தொடர்ந்​து, ஹரித்​வார் செல்​வ​தாக கூறி​விட்டு சென்ற செங்​கோட்​டையன், டெல்​லி​யில் அமித் ஷா மற்​றும் நிர்​மலா சீதா​ரமனை சந்​தித்து பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளார்.

இந்த சந்​திப்​பின் போது, 2026 தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சியை பிடிக்க வேண்​டுமென்​றால், ஒருங்​கிணைந்த அதிமுக​வுடன் தேர்​தலை சந்​திக்க வேண்​டும் என அமித் ஷாவிடம் செங்​கோட்​டையன் வலி​யுறுத்​தி​ய​தாக தெரி​கிறது.

அது​மட்​டுமில்​லாமல், ஓபிஎஸ், தினகரனை டெல்​லிக்கு அழைத்து பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும் என அமித் ஷாவிடம் செங்​கோட்​டையன் கூறிய​தாக​வும் தெரி​கிறது. இதையடுத்​து, இரு​வரை​யும் டெல்​லிக்கு அழைத்து பேச பாஜக மேலிடம் திட்​ட​மிட்டு வரு​வ​தாக​வும், இதற்​கான ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​வ​தாக​வும் பாஜக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

அதேசம​யம், பிரிந்​தவர்​கள் பிரிந்​தவர்​கள்​தான். அவர்​களை மீண்​டும் அதி​முக​வில் இணைப்​ப​தற்​கான வாய்ப்பு துளி​யும் இல்லை என கறார் காட்டி வரும் பழனி​சாமி​யிட​மும் அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து சமா​தான பேச்​சு​வார்த்தை நடத்​த​வும் அதற்கு முன்பாக, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரனிட​மும் ஆலோ​சனை நடத்​த​வும் பாஜக மேலிடம் திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதற்​காக அவர் இன்று (11-ம் தேதி) டெல்லி செல்​கிறார். அங்கு அமித் ஷா, ஜெ.பி.நட்​டா, தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் உள்​ளிட்​டோரை சந்​திக்​கிறார். அப்​போது, அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து அவர் வலி​யுறுத்த உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இந்​தச் சூழலில் நயி​னார் நாகேந்​திரனிடம் ஆலோ​சித்த பிறகு ஒபிஎஸ், தினகரனை டெல்​லிக்கு அழைத்து சமா​தான பேச்​சு​வார்த்தையை நடத்த திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதன்​மூலம் கூட்​ட​ணி​யில் ஏற்​பட்​டுள்ள சலசலப்​பு​களுக்கு முற்​றுப்​புள்ளி வைத்​து, பிரிந்து சென்​றவர்​களை ஒருங்​கிணைத்​து, பலமான கூட்​டணி அமைத்​து தேர்​தலை சந்​திக்​க பாஜக ஆயத்த​மாக வருவது தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *