வயநாடு மக்களவை இடைத்தேர்தலுக்குக் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் “தனது சகோதரியை விட சிறந்த பிரநிதியை என்னால் கற்பனை செய்ய முடியாது” என்று ராகுலி காந்தி தெரிவித்தார்.
இதுதொடர்பான ராகுலின் எக்ஸ் பதிவில்
வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.