தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறா பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில், கல்காச்ஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதிஷியை எதிர்த்து பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார்.
ரமேஷ் பிதுரி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று பேசுகையில், “பிகார் மாநில சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று லாலு உறுதியளித்தார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஓக்லா மற்றும் சங்கம் விஹார் பகுதிகலிலுள்ள சாலைகளை உருவாக்கியதைப் போன்று கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று உறுதியளிக்கிறேன்” எனப் பேசியிருந்தார்.