“பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்னுயிரே..!”- மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்| seeman-emotional-birthday-message-to-his-wife

Spread the love

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல் விழி இன்று (நவ.24) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சீமான் வெளியிட்டிருக்கும் பதிவில்,

“கசிந்து உள்ளம் உருகும் காதலின் மெய்ப்பொருளும் நீயே..!

நசிந்து போகாது நாளும் காக்கும் வாழ்வின் முதற்பொருளும் நீயே..!

மணக்கோலம் பூண்ட நாள் முதலாக போர்க்காலம் என்றாலும் பூக்காலம் என்றாலும் நீ தருகின்ற அன்பினில் குறையேதும் வைத்ததில்லையே..!

சீமான் தன் மனைவி கயல்விழியுடன்

சீமான் தன் மனைவி கயல்விழியுடன்

எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே?

இடம்மாற்றி கொண்ட இதயத்தில் இருப்பவளே!

தடுமாறும் பொழுதிலும் தடுத்தாளும் பரம்பொருளே !

இனமானப் பெரும்பணியில் இடர்பாடுகள் யாவையும் ஏற்றும் சுமந்தும் யாதுமாகி நின்றாய் நீயே..!

எனக்கு நீ இன்னொரு தாயே!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்னுயிரே..!” என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *