அமெரிக்கவில் 1860 காலகட்டத்தில் அடிமை முறைக்கு ஆதரவாகவும் – எதிராகவும் உள்நாட்டுப்போர் நடந்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்தபோது, அமெரிக்காவில் அடிமைகளாக இருந்தவர்களுக்கு சாதகமாக அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை அமெரிக்க சட்டப்படி அமெரிக்கராகவே கருதப்படும் எனச் சட்டமியற்றப்பட்டது.
அதன்படி, அமெரிக்க அரசியலைப்பின் 14-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1868, “அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற மற்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து நபர்களும் அமெரிக்கா மற்றும் அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் குடிமக்கள்.” என வரையறுக்கிறது. அந்தச் சட்டம் நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் தொடர்கிறது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 2025-ல், சட்டவிரோத குடியேறிகள், சுற்றுலா விசா போன்ற தற்காலிகமாக அமெரிக்காவில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது.
இதற்கு முன் அத்தகைய குடியுரிமைப் பெற்றவர்களிடமிருந்து குடியுரிமை திரும்பப்பெறப்படாது. இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கே இந்த சட்டம் செல்லும்” என அறிவித்தார். அதிபர் ட்ரம்பின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.