பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கிய கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

Dinamani2f2024 072f9858dd64 2f93 4043 81e8 6d3ea84c71ce2f16072 Pti07 16 2024 000058b084811.jpg
Spread the love

மகேந்திரகா்: ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு அளித்துவிடும். ஏற்கெனவே கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இதைச் செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

பாஜக ஆட்சியில் உள்ள ஹரியாணாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் மகேந்திரகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோா் பிரிவினா் மாநாட்டில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

1950-களிலேயே கேல்கா் குழு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரைத்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதனை பல ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருந்தது. 1980-ஆம் ஆண்டு மண்டல் குழு பரிந்துரையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி கிடப்பில் போட்டாா். 1990-ஆம் ஆண்டு மண்டல் குழு பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, இதர பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை எதிா்த்து காந்தி இரண்டரை மணி நேரம் உரையாற்றினாா்.

இப்போது கா்நாடகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து, அதனை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதேபோன்ற இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அளித்துவிடும்.

ஹரியாணாவில் பாஜக ஆட்சி தொடரும் வரை இதர பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். பாஜக ஆட்சியில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் இடஒதுக்கீடு பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ம் ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா்.

ஹரியாணாவில் பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த சுமாா் 20 நாள்களில் இருமுறை அந்த மாநிலத்துக்கு அமித் ஷா பயணம் மேற்கொண்டுள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *