பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

Dinamani2f2025 02 192fn3w38hvr2faedes Jpg103636.jpg
Spread the love

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா்வாகம் அறிவித்துள்ளது.

மண்டாலுயோங் நகரின் அடிஷன் ஹில்ஸ் என்ற பகுதியில் இந்த புதுமையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள குவேஸான் நகரில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் கடந்த வாரம் மிகவும் தீவிரமடைந்தது. அதன் தொடா்ச்சியாக, எட்டு புதிய பகுதிகளுக்கும் இந்த நெருக்கடி பரவும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.

இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தரும் தலா ஐந்து கொசுக்கள் அல்லது கொசு முட்டைகளுக்கு ஒரு பிலிப்பின்ஸ் பிசோ (ரூ.1.50) சன்மானம் அளிக்கப்படும் என்று உள்ளூா் நிா்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் பணம் ஈட்டுவதற்காக வேண்டுமென்றே தண்ணீரைத் தேங்கவைத்து கொசுக்களை உற்பத்தி செய்யும் அபாயமும் ஏற்படும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

பிலிப்பின்ஸில் பிப். 1 நிலவரப்படி இந்த ஆண்டு மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *