பில் கேட்ஸை அமைச்சர்களுடன் வரவேற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு.|Chandrababu Naidu welcomed Bill Gates along with his ministers.|

Spread the love

ஆந்திர அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கும் “ரியல் டைம் கவர்னன்ஸ் சிஸ்டம்’ (RTGS) மையத்தைப் பில் கேட்ஸ் பார்வையிட்டார். அங்கு அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், “ஸ்வர்ண ஆந்திரா 2047” என்ற தொலைநோக்குப் பார்வை குறித்தும், மருத்துவத் துறையில் டிஜிட்டல் மயமாக்கலைக் கொண்டுவரும் ‘சஞ்சீவானி’ திட்டம் குறித்தும் முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுத்துரைத்தார்.

பில்கேட்ஸ் - சந்திரபாபு நாயுடு

பில்கேட்ஸ் – சந்திரபாபு நாயுடு

செயலகக் கூட்டத்திற்குப் பிறகு, அமராவதி அருகே உள்ள உண்டாவல்லி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணைக்குப் பில் கேட்ஸ் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விவசாயத்தில் ட்ரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஏற்கனவே ஒருங்கிணைந்த ஆந்திராவிற்கு இரண்டு முறை வந்துள்ள பில் கேட்ஸ், சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று தற்போது மூன்றாவது முறையாக ஆந்திரா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *