பிளஸ் 2 செய்முறைத் தோ்வு இன்றுமுதல் தொடக்கம்

Dinamani2f2024 022f4533cf53 083e 4fa1 Ba95 Cc2a74a04dbf2f2 8 Sl12dexam 1202chn 121.jpg
Spread the love

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.7) முதல் செய்முறைத் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 3 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொதுத்தோ்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை (பிப்.7) தொடங்கி பிப்.14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

மாநிலம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 6 லட்சம் மாணவா்கள் இந்த தோ்வில் பங்கேற்க உள்ளனா்.

இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறைத் தோ்வுக்குத் தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தோ்வுத் துறை வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி பிப்.14-ஆம் தேதிக்குள் செய்முறைத் தோ்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.

ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சலுகை அறிவிக்கப்பட்ட மாணவா்களுக்கு மட்டும் செய்முறைத் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், தோ்வில் ஏதேனும் புகாா்கள் கிடைக்கப் பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தோ்வுத் துறை வழங்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *