பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா..! அணியில் ஒரு மாற்றம்!

Dinamani2f2024 11 282fzj726nwx2fap24329309999990.jpg
Spread the love

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணியின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை (டிச.6) தொடங்குகிறது.

அடிலெய்டில் இரவு பகலாக பிங்க் நிறப் பந்தில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.

ஏற்கனவே இந்திய அணி கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த ஆடுகளத்தில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன. மிட்செல் மார்ஷுக்கு பதிலாக வெப்ஸ்டரும் ஜோஸ் ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலாண்ட்டும் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படது.

இந்த நிலையில் ஹேசில்வுட்டுக்கு பதிலாக போலாண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

வழக்காமாக இந்த பிட்சில் பந்து சிறிது வழுக்கிச்செல்லும். அது ஸ்காட் போலாண்டுக்கு மிகவும் உதவும்.

சில நாள்களுக்கு முன்னதாக கன்பெராவில் சிறப்பாக பந்துவீசினார். தனக்கான சரியான ரிதத்தில் இருக்கிறார். அவர் அணியில் இடம்பெறுவது கேப்டனாக எனக்கு மகிழ்ச்சி.

தேவைப்பட்டால் அதிகமான ஓவர்கள் வீச அவர் தயாராக இருப்பார். தொடர்ச்சியாக நல்ல செயல்பாடுகளை வழங்கிவரும் அவர் இந்தமாதிரி போட்டிகளில் விளையாட எப்போதும் தயாராக இருக்கிறார் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *