“பிள்ளைகளை நம்பலாமா?” – ஓய்வுக்கு முன் நீங்கள் கேட்க வேண்டிய 5 கேள்விகள்!

Spread the love

நீங்கள் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்தவர். ஆனால், ஓய்வுக்காலம் என்று வரும்போது, “இனி என் செலவுக்கு யாரை எதிர்பார்ப்பது?” என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?

இந்தியாவில் ஓய்வுக்கால வாழ்க்கை குறித்த இரண்டு அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் இதோ:

  1. சுயசார்பின்மை: 2023-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 67% இந்திய முதியவர்கள் தங்கள் அன்றாட செலவுகளுக்குத் தங்கள் பிள்ளைகளையோ அல்லது உறவினர்களையோதான் சார்ந்து இருக்கிறார்கள்.

  2. மருத்துவச் செலவு: இந்தியாவில் மருத்துவச் செலவுகள் ஆண்டுக்கு 14% வரை உயர்கிறது. அதாவது, இன்று ₹5 லட்சமாக இருக்கும் ஒரு அறுவை சிகிச்சையின் செலவு, நீங்கள் ஓய்வு பெறும்போது ₹10 லட்சத்தைத் தாண்டியிருக்கும்.

இந்த ஆபத்தான சூழலைத் தவிர்க்க, 50 வயதைத் தொட்டவுடன், நீங்கள் செய்தே தீர வேண்டிய 5 விஷயங்கள் (Checklist) இதோ:

1. கடன் இல்லா வாழ்க்கை

ஓய்வு பெறும் நாளில் உங்கள் தலையில் ஒரு ரூபாய் கடன் கூட இருக்கக்கூடாது. வீட்டுக் கடன் (Home Loan) பாக்கி இருந்தால், உங்கள் பி.எஃப் (PF) பணத்தை எடுத்து அதை அடைப்பது புத்திசாலித்தனமா? அல்லது இ.எம்.ஐ-யை தொடர்வதா? இந்தக் குழப்பம் ஆபத்தானது. உங்கள் ஓய்வுக்காலத் தொகுப்பு நிதியை (Corpus) கடனுக்காக இழப்பது, உங்கள் முதுகெலும்பையே உடைப்பதற்குச் சமம்.

2. மருத்துவக் காப்பீடு: ‘சூப்பர் டாப்-அப்’ உள்ளதா?

அலுவலகம் தரும் இன்சூரன்ஸ் நீங்கள் வேலையை விட்ட மறுநாளே காலாவதியாகிவிடும். தனிப்பட்ட பாலிசி அவசியம். ஆனால், வெறும் 5 லட்ச ரூபாய் பாலிசி இன்று போதாது. இங்குதான் தொழில்நுட்ப விவரங்களைக் கவனிக்க வேண்டும்:

  • குறைந்தபட்ச பாலிசி தொகை: குறைந்தது ₹5 லட்சத்திற்கு ஒரு அடிப்படை பாலிசி.

  • சூப்பர் டாப் அப்: குறைவான பிரீமியத்தில், ₹20 லட்சம் வரை கவரேஜ் தரும் “சூப்பர் டாப்-அப்’ வசதியைச் சேர்த்துக் கொள்வது மிக அவசியம். இதுதான் பெரிய நோய்கள் தாக்கும்போது உங்களைக் காப்பாற்றும் கவசம்.

3. அவசர கால பணப்புழக்கம்

எல்லா பணத்தையும் நிலத்திலோ, வீட்டிலோ முடக்கி வைப்பது 50 வயதில் செய்யக் கூடாத தவறு. அவசரத் தேவைக்கு 24 மணி நேரத்தில் பணமாக மாற்றக்கூடிய முதலீடுகள் உங்களிடம் இருக்க வேண்டும்.

  • குறைந்தது உங்கள் 6 மாத குடும்பச் செலவுக்கான தொகை வங்கி சேமிப்பிலோ அல்லது லிக்விட் ஃபண்டுகளிலோ இருக்க வேண்டும்.

  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற பாதுகாப்பான திட்டங்களில் எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

4. பணவீக்கத்தை வெல்லும் வருமானம்

மாதம் ₹25,000 வட்டி வந்தால் போதும் என்று நினைக்கிறீர்களா? 5 வருடங்களுக்குப் பிறகு அதே ₹25,000-ன் மதிப்பு பாதியாகக் குறைந்திருக்கும். உங்கள் முதலீடு, வங்கி வட்டியைத் தாண்டி வளர வேண்டும். அதற்கு, குறைந்தபட்சம் 20-30% முதலீடாவது ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் (Equity Hybrid Funds) இருப்பது, நீண்ட காலத்திற்கு உங்கள் பணத்தின் மதிப்பைத் தக்கவைக்கும்.

5. எஸ்டேட் பிளானிங்

இது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமல்ல. உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள் சொத்துக்கள், வாரிசுகளுக்கு எளிதாகச் சென்று சேருமா? அல்லது நீதிமன்ற படியேற வேண்டுமா? ஒரு தெளிவான ‘உயில்’ (Will) எழுதி வைப்பது, உங்கள் குடும்பத்தின் நிம்மதிக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசு.

மேலே சொன்ன 5 விஷயங்களையும் நீங்கள் செய்துவிட்டால், உங்கள் ஓய்வுக்காலம் என்பது ‘முதுமை’ அல்ல; அது ஒரு ‘கெளரவம்’.

ஆனால், இதைத் துல்லியமாகத் திட்டமிடுவது எப்படி? எதில் எவ்வளவு முதலீடு செய்வது?

இதோ ஒரு வாய்ப்பு…

Retirement Planning Workshop by Labham

Retirement Planning Workshop by Labham

“நிம்மதியான ஓய்வுக்காலம் உறுதி!” – 50+ வயதினருக்கான சிறப்பு ஒர்க் ஷாப்

இந்த இலவச வகுப்பில், உங்கள் ஓய்வுக்கால நிதியை (Retirement Corpus) பாதுகாப்பது மற்றும் பெருக்குவது குறித்து விரிவாக அலசவுள்ளார் நிபுணர் திரு. ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்.

விவரங்கள்:
நாள்: ஜனவரி 07, 2026 (புதன்) | நேரம்: மாலை 07:00 மணி

இன்றே உங்கள் இடத்தை உறுதி செய்யுங்கள் (இலவச நிகழ்ச்சி, முன்பதிவு கட்டாயம்):
https://forms.gle/W47wCvovLziqPjNXA

உங்கள் சுயமரியாதையைக் காக்க, ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *