பிஹார் தேர்தல் முடிவை விமர்சனக் கண்ணோட்டத்தோடுதான் பார்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்பி நேற்று தெரிவித்தார்.
சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்ல, மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்த கமல்ஹாசன் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஹார் தேர்தல் முடிவுகளை விமர்சனக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். தமிழகம் கவனமாகவும், விழிப்போடும் இருக்க வேண்டும். மேகேதாட்டு அணை பிரச்சினை நான் சிறு வயதாக இருந்தபோதிருந்தே நடந்து கொண்டிருக்கிறது. தற்போது எனது தாடியின் நிறமே மாறி விட்டது. ஆனால், தண்ணீர் கருப்பாகவும், தாடி வெள்ளையாகவும் மாற ஆரம்பித்து விட்டது.
புதிதாக கட்சி தொடங்குபவர்களின் குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு நடிப்பதாக இருந்தால்கூட இருப்பதிலேயே, தன் பிள்ளை சிறந்த நடிகராக வேண்டும் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஏழையாக இருப்பவர்கள் கூட, தனது பிள்ளையை கொஞ்சும்போது மகராஜனே.. என்றுதான் கொஞ்சுவர். ஆசை எல்லோருக்கும் இருக்கும். என்று கூறினார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்று விஜய் கூறுவதாக செய்தியாளர்கள் எழுபபிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, எங்களது பார்வைதானே; ஓட்டு அவர்களுடையது (மக்களுடையது), என்றார்.