பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
ஸ்பேஸ்டெக் -ஏ, ஸ்பேஸ்டெக் – பி ஆகிய இரு விண்கலன்கள் திட்டமிட்டபடி ராக்கெட்டில் இருந்து பிரிந்ததாகவும், அதன் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக இன்று (டிச. 30) விண்ணில் செலுத்தப்பட்டது.
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுவதால், இஸ்ரோ வரலாற்றில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்திய ஆய்வு மையத்தை 2035 – க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், ராக்கெட்டில் இருந்த நான்கு அடுக்குகளும் சரியாக ராக்கெட்டில் இருந்து பிரிந்தன. மூன்று அடுக்குகள் பிரிந்த நிலையில், நான்காவது அடுக்கில் இருந்த இரு விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்தன.