பி.டி.உஷா, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய தட்சசீலா பல்கலைக்கழகம்!

Spread the love

தற்போது இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் பயிற்சிகளை முறையாகப் பயன்படுத்தி, வெற்றிகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக, துப்பாக்கி சுடுதல், குத்துச் சண்டை, பேட்மிண்டன் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் சாதிப்பது பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மாணவர்களும் தனித்திறன் படைத்தவர்கள்.

சரியான பாதையில் உறுதியாக பயனித்தால் அவர்கள் அசாத்தியமாக வெற்றிபெறலாம்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், “இந்த கௌரவம் எனக்கானது இல்லை. முழு நவீன தமிழ் இலக்கிய இயக்கத்திற்கு சொந்தமானது.

நவீன தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலும் புறநில மனிதர்களாகவே பார்க்கப்படும் சூழலில், இப்படியான கௌரவங்கள் அரிதாகவே கிடைக்கும். அந்த வகையில் இந்த அங்கீகாரம் மிகவும் அர்த்தம் வாய்ந்தது” என்றார்.

பதிவார் டாக்டர் செந்தில்

பதிவார் டாக்டர் செந்தில்

இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் செந்தில், “எங்கள் ஸ்ரீமணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு தட்சசீலா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் முக்கியமான இருவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் அளிக்க முடிவு செய்தோம்.

அதன்படி எழுத்தாளரும் தத்துவார்த்தவாதியுமான ஜெயமோகன் அவர்களையும், இந்திய தடகள வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரமான பி.டி.உஷா அவர்களையும் இறுதி செய்தோம். இருபெரும் ஆளுமைகளுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியது எங்கள் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த கௌரவம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *