பீகார்: முதல்வர் பதவியை துறக்கிறாரா நிதிஷ் குமார்? – துணை முதல்வராகும் வாரிசு? – என்ன நடக்கிறது?

Spread the love

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி போட்டியிட்டது. அரசியல் நிபுணர்களால் ‘நிதிஷ் குமார் இந்த தேர்தலில் தோல்வியடைவார்’ எனக் கூறப்பட்ட நிலையில், பீகார் பெண்களின் வாக்குகளால் அமோக வெற்றியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து 10-வது முறையாக முதல்வர் பதவியேற்றார். ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் காரணமாகவும், பீகாரில் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தவுமே அவரின் எம்.பி விருப்பம் தள்ளிப்போடப்பட்டதாக கூறப்படுகிறது.

நிதிஷ் குமார், நிஷாந்த் குமார்
நிதிஷ் குமார், நிஷாந்த் குமார்

75 வயதான நிதிஷ் குமார், 10 முறை முதலமைச்சராகப் பதவியேற்று சாதனைப் படைத்திருக்கும் நிலையில்தான், அவர் முதல்வர் பதவியை துறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், பீகாரின் அடுத்த முதல்வராக பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்படலாம் என்றும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் மாநில துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *