ஸ்ரீனிவாசன் 1977-ல் பி.ஏ. பேக்கரின் “மணிமுழக்கம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் மலையாளத் திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். ஏறக்குறைய 50 ஆண்டுகளாக, 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சமூகத்தின் மீதும் அவருக்கு ஆழ்ந்த கருத்து இருந்திருக்கிறது. கூர்மையான சமூக விமர்சனங்களுக்காகவும், அவரின் நடிப்புக்காகவும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர். நடிப்புக்கு அப்பாற்பட்டு, அவர் ஒரு புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் திகழ்ந்தார். இன்றும் நினைவுகூறப்படும் பல வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை எழுதியதுடன், மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்ற பல படங்களையும் இயக்கியிருக்கிறார்.

நடிகர் ஶ்ரீனிவாசன்தன் படைப்புகளில் பெரும்பாலும் நகைச்சுவையையும் சமூக விமர்சனத்தையும் இணைத்து, நிஜ வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசும் படைப்பாளராக இருக்க வேண்டும் என விரும்பினார். ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்து, பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.
நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு நவீன மலையாளத் திரையுலகை வடிவமைக்க உதவியதுடன், பல தலைமுறை நடிகர்கள் மற்றும் இயக்குநர்களையும் உத்வேகப்படுத்தியிருக்கிறது.
தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார்.
நடிகர் ஶ்ரீனிவாசனின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.