பூஜா கேத்கர் தொடர்ந்த முன்ஜாமீன் மனு மீது நாளை(ஆக. 1) மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று தில்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கூடுதல் அமர்வு நீதிபதி தேவேந்திர குமார் ஜங்காலா முன்பு, பூஜா கேத்தர் தாக்கல் செய்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
பூஜா கேத்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாதவன், யுபிஎஸ்சி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வாதத்தை முன்வைத்தார்.
பூஜா தனது பெயரை ஒவ்வொரு முறை மாற்றும்போதும் அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது, 8 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவ குழுவால் உடலில் 47 சதவிகிதம் குறைபாடு இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், புணே ஆட்சியர் மீது பூஜா கேத்கர் அளித்த பாலியல் புகாருக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த புகார்கள் எழுப்பப்பட்டுள்ளதாக பூஜா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.