ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 15-வது மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக அவைதலைவராகவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரகுவீர் சிங் காடியன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
அக்டோபர் 17-ஆம் தேதி பஞ்ச்குலாவில் ஹரியாணா முதல்வராகப் பதவியேற்ற சைனி, தற்காலிக அவைத் தலைவரால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.
சைனிக்குப் பிறகு அவரது அமைச்சர்கள் குழு – அம்பாலா கான்ட் தொகுதியிலிருந்து 7 முறை எம்எல்ஏவாக இருந்த அனில் விஜ், இஸ்ரானா எம்எல்ஏ கிரிஷன் லால் பன்வார், பாட்ஷாபூர் எம்ல்ஏ ராவ் நபீர் சிங், பானிபட் எம்எலிஏ மஹிபால் தண்டா, பரிதாபாத் சட்டமன்ற உறுப்பினர் விபுல் கோயல், கோஹானா எம்எல்ஏ அரவிந்த் சர்மா மற்றும் ராடௌர் எம்எல்ஏ ஷியாம் சிங் ராணா ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.