இந்தியா, ரஷ்யா இடையே வர்த்தக பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது.
இந்தியா கிட்டத்தட்ட 65 பில்லியன் டாலர் அளவிற்கு ரஷ்யப் பொருள்களை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் கச்சா எண்ணெய் தான் மிக அதிகம்.
ஆனால், ரஷ்யாவோ இந்தியாவிடம் இருந்து வெறும் 5 பில்லியன் டாலர் அளவிற்கு தான் இறக்குமதி செய்கிறது.
இதை சமன் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதை சரிசெய்யவும், இந்தியாவில் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்கவும் புதின் கடந்த அக்டோபர் மாதம் தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அது தற்போதைய பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருக்கும்.

ரஷ்யாவில் இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்ய ஏகப்பட்ட கெடுபிடிகள், வரிகள் உள்ளன. அது எளிதாக்கப்படும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் முன்னோட்டமாக, கடந்த மாதத்தில் இருந்து இந்தியாவில் இருந்து உருளைக்கிழங்கு மற்றும் மாதுளை இறக்குமதிகளை அதிகரித்துள்ளது ரஷ்யா.
இந்தியாவும் பதிலுக்கு ரஷ்ய உர இறக்குமதி அதிகரித்துள்ளது.
இவற்றை தாண்டி, ரஷ்யா இந்தியாவின் மருந்துகள் மற்றும் விவசாய பொருள்களை அதிகம் இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றது.
இதுபோக, இரு நாடுகளுமே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போடவும் ஆர்வமாக உள்ளனர்.