சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை நிலவரப்படி, தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 66,880-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 20 உயர்ந்து ரூ. 8,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.