திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் சேதம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரசால் கட்டப்பட்ட ரூ. 16 கோடி பாலம், கடந்த செப்டபரில் மாதம் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டே மாதங்களில் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சமூக ஊடகங்களில் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், உயர்மட்ட பாலம் சேதம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:
அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தற்போது 30.11.2024 மற்றும் 1.12.2024 ஆகிய நாள்களில் ஃபென்ஜால் புயலால் பெய்த வரலாறு காணாத மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளபெருக்கினால் சேதமடைந்துள்ளது.
பாலத்தின் நீளம் – 250 மீ (20.8 மீ நீளத்தில் 12 கண்கள்), அகலம் – 12 மீ, ஆண்டு சராசரி மழை அளவு, சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஆற்றுபடுக்கையில் இருந்து வடிவமைக்கப்பட்ட நீர்வழியின் உயரம் – 5 மீ. மற்றும் பாலத்தின் உயரம் – 7 மீ.